• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாறை சரிவால் தடம் புரண்ட கடுகதி ரயில்

இலங்கை

பேராதனையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த கடுகதி ரயில் ஒன்று, இன்று (05) காலை கங்கொட மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டது.

இந்த விபத்து இன்று அதிகாலை சுமார் 4:40 மணியளவில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பாதையில் மண் மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தினால், ரயிலின் முன்பகுதியும் சேதமடைந்தது.

இச்சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த ரயில் சாரதி, ரயில் ஒரு மண் மேட்டிலும் பாறையிலும் மோதியதாகக் கூறினார்.

இந்த சம்பவத்தினால் குறிப்பிட்ட ரயில் மார்க்கமூடான இரு திசைகளிலும் செல்லும் பிற ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply