பாரதியை போலவே அவரிடத்து மச்சமும் பிரபலமாக இருந்தது....
சினிமா
எம்.ஜி. ஆர் நடித்து 1966 ஆம் ஆண்டு வெளியான நாடோடி மற்றும் சந்திரோதயம் ஆகிய இரண்டு திரைப்படங்களில் பாரதி இரண்டாம் நாயகியாக நடித்தார், இது தமிழ் திரையுலகில் அவரது பெயரை உயர்த்தியது. பின்னர், சிவாஜி கணேசன் போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக தங்க சுரங்கம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடிக்க தெய்வ செயல், அவளுகென்று ஓர் மனம் ஆகிய படங்களில் முத்துராமன், ஜெமினி கணேசன் ஆகியோருடன் ஜோடியாக நடித்தார் .
அவளுகென்று ஓர் மனம் " படம்தான் இவரின் நடிப்புக்கு இன்றும் சான்றாக சொல்லப்படுகிறது . ஒருபுறம் காஞ்சனா மறுபுறம் ஜெமினி கணேசன் & முத்துராமன் ஆகியோர் இருந்தும் படத்தை தன் தோளில் சுமந்தார் பாரதி . இதுவும் இயக்குனர் ஸ்ரீதர் தந்த ஊக்கமாகவே இருந்திருக்கும் .
இவர் சிரிப்பு மிச்சம் மீதி வைக்காத முழு சிரிப்பாகவே இருக்கும் .அப்படி வாய் நிறைய சிரிப்பார் . குரலில்(நடிகை ஜெயந்தி மாதிரி) ஒரு தனித்துவம் இருக்கும் . . எண் எட்டு ' 8 'மாதிரி உருவமைப்புள்ள நாயகிகளில் மத்தியில் "சித்து சிறுக்கு" என்று ஸ்லிம்மாக இருப்பார் பாரதி .
நீங்கள் அவளுகென்று ஓர் மனம்' படத்தின் பாடல் மலர் ., எது என் கண்கள்தான் என்று சொல்வேனடி " என்ற பாடலில் ஸ்விம் சூட்டில் கவர்ச்சியின் விளிம்பை தாண்டாமல் நீச்சலடிப்பார். ( ஆனால் இதே படத்தின் ஹிந்தி மறு ஆக்கத்தில் கவர்ச்சியின் விளிம்பை அங்கெ கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று தாண்டி நீந்திருப்பர் , ஆனாலும் பஹுத் அச்சா !) அந்த உடை அவ்வளவு பொருத்தமாக இருக்கும் .
இந்த அழகிய நடிகை தமிழில் பெரிய அளவில் பேசப்படாவிட்டாலும் மற்ற மொழிகளில் வெற்றிகரமாக வலம் வந்தார். கன்னட ராஜ்குமாரும் பாரதியும் ஒரு காலத்தில் கன்னட திரைப்பட உலகின் சிறந்த ஜோடியக கருதப்பட்டனர். நடிகர் திலகத்துடன் கட்டழகு பாப்பாவாக( ஜோடியாக) ஒரே படத்தில் தான் நடித்தார் . அதுதான் தங்க சுரங்கம் . பின்னாளில் 1997 இல் ஒரு யாத்ரா மொழி மலையாள படத்தில் நடித்தார் . ஆனால் படத்தில் இருவருக்கும் ஒரு காம்பினேஷன் ஷாட் கூட இருக்காது .
ராகேஷ் ரோஷன் ஜோடியாக நடித்த ஹிந்தி படத்தில் ஊட்டி வரை உறவு படத்தில் கே ஆர் விஜயா செய்த ரோலை இவர் செய்தார் .அப்படத்தில் நடனம் ,நடிப்பு என்று அசத்தி இருப்பார் .
அந்தக்கால கன்னட பெண் ரசிகைகள் இவர் நெஞ்சில் உள்ள மச்சம் போலவே ஐப்ரோ பென்சிலில் மச்சம் வைத்து கொண்டு திரிந்து வந்தனர் என்னும் கன்னட சினிமா செய்தியும் உண்டு . பாரதியை போலவே அவரிடத்து மச்சமும் பிரபலமாக இருந்தது.
1998ல் கார்த்திக் அம்மாவாக சுந்தர பாண்டியன் தான் இவரது கடைசி தமிழ் படம் . பாரதி நடிக வராவிட்டால் கூடைப்பந்து வீராங்கனையாக தடகள வீராங்கனையாக ஆகியிருப்பாராம் .நல்லவேளை சினிமா பீல்டுக்கு வந்து நம் மனக்கூடையில் அவர் படங்கள் எனும் பந்துகளை போட்டு பாயிண்ட் அடித்துவிட்டார் ..
- ஆறுமுகம் சிக்ஸ்ஃபேஸ்






















