• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மலையக மக்களை இழிவுபடுத்திய முகநூல் பதிவு - ஜீவன் எம்.பியின் அதிரடி நடவடிக்கை

இலங்கை

மலையகத் தமிழ் மக்களை சாதி மற்றும் தொழில் அடிப்படையில் இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டதாகக் கூறப்படும் நபருக்கு எதிராக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இந்த முறைப்பாட்டை இன்று (03-10-2026) அளித்துள்ளார்.

இந்தநிலையில் S3-ICCPR சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துமாறு கோரி காவல்துறை மா அதிபரின் Tell IGP – Sri Lanka Police முறைப்பாட்டு இணையத்தளத்தின் ஊடாக இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரிடம் கோரிக்கை

குறித்த முறைப்பாட்டை காவல்துறையினர் ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அதற்கான குறிப்பு இலக்கமும் ஜீவன் தொண்டமானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையகத் தமிழ் சமூகத்தை இலக்காகக் கொண்டு இழிவான மற்றும் பாகுபாடான கருத்துக்கள் குறித்த முகநூல் பதிவில் இடம்பெற்றுள்ளதாக ஜீவன் தொண்டமான் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, மலையகத் தமிழ் மக்கள் இங்கு வந்து கழிப்பறைகளைச் சுத்தம் செய்து தேயிலை பறிக்க வந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இந்தக் கருத்துக்கள் சமூகத்தை இழிவுபடுத்துவதுடன் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த பதிவின் screenshot, Facebook பதிவின் அசல் URL மற்றும் சம்பந்தப்பட்ட Facebook சுயவிவரத்தின் விபரங்கள் தம்மிடம் ஆதாரங்களாக இருப்பதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

எனவே, குறித்த பதிவை விசாரணைக்கு உட்படுத்தி நடைமுறையில் உள்ள சட்டங்களின் கீழ் குற்றம் ஏதேனும் இடம்பெற்றுள்ளதா என்பதை ஆராயுமாறும் குற்றம் இடம்பெற்றுள்ளதாகக் கண்டறியப்பட்டால் சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply