• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இன்றைய டொலர் நிலவரம் - டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் சிறிய அதிகரிப்பு

இலங்கை

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறியளவில் அதிகரித்துள்ளது.

அதன்படி, முக்கிய வர்த்தக வங்கிகளில் இன்று டொலரின் விற்பனை  விலை 334 முதல் 335 ரூபாய்க்கு இடையில் காணப்படுகிறது.

செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.326.35 ஆகவும், விற்பனை விலை ரூ.335.60 ஆகவும் மாற்றமின்றி உள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி

NDB வங்கியில் டொலரின் கொள்வனவு விலை ரூ.326.10 ஆகவும், விற்பனை விலைரூ.335.10 ஆகவும் காணப்படுகிறது.

மக்கள் வங்கியில் கொள்வனவு விலை ரூ.326.62 இலிருந்து ரூ.326.48 ஆகவும், விற்பனை விலை ரூ.334.72 இலிருந்து ரூ.334.57 ஆகவும் குறைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில் கொள்வனவு விலை ரூ.324.59 இலிருந்து ரூ.324.34 ஆகவும், விற்பனை விலை ரூ.334.50 இலிருந்து ரூ.334.25 ஆகவும் குறைந்துள்ளது.

இதனிடையே, சம்பத் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை ரூ.326.75 இலிருந்து ரூ.326.50 ஆகவும், விற்பனை விலை ரூ.334.75 இலிருந்து ரூ.334.50 ஆகவும் குறைந்துள்ளது.
 

Leave a Reply