• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உறுதியானது சென்னை 600 028 III- அடுத்த மாதம் தொடங்கும் படப்பிடிப்பு

சினிமா

வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007-ம் ஆண்டு வெளியான படம் ‘சென்னை 600 028’. எஸ்.பி.பி. சரண், ஜே.கே. சரவணா தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் ஆகியோர் இசை அமைத்து இருந்தனர். மேலும் இப்படத்தில் சிவா, ஜெய், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கிரிக்கெட் விளையாட்டையும் நட்பையும் மையமாகக் கொண்டு நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து, 2016-ம் ஆண்டு இரண்டாம் பாகமான ‘சென்னை 600 028 II’ வெளியானது. இப்படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதை அடுத்து மூன்றாம் பாகம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘சென்னை 600 028 III’ தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இதற்கென பிரத்யேகமான அரங்கம் அமைக்கப்பட்டு, அடுத்த மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் சுமார் 10 நாட்கள் நடைபெறுகிறது.

முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகு, இரண்டாம் கட்ட பணிகள் பாங்காக்கில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல் இரண்டு பாகங்களைப் போலவே, 'சென்னை 600 028 பாகம் 3' திரைப்படமும் வெங்கட் பிரபுவின் பாணியில் மிகுந்த கலகலப்பும் பொழுதுபோக்கும் நிறைந்த படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply