கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் புதிய நிர்வாகிகள் தெரிவு
கனடா
கடந்த 26.09.2026 அன்று அண்ணாமலை பல்கலைக்கழகம் கனடா வளாக மண்டபத்தில் இடம்பெற்ற கனடாத் தமிழ் எழுத்தாளர் இணயத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கான புதிய நிர்வாக அங்கத்தவர்கள் தெரிவு இடம்பெற்றது. ரவி கனகசபை அவர்களது தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், புதிய தலைவராக முனைவர் திருமதி வாசுகி நகுலராஜா அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். திருமதி நாகேஸ்வரி ஸ்ரீ குமரகுரு அவர்கள் செயலாளராகவும், திரு. ரவி கனகசபை அவர்கள் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
துணைத் தலைவராக திரு.லோகேந்திரலிங்கம் அவர்களும், துணைச் செயலாளராக திரு. குரு அரவிந்தன் அவர்களும், உள்ளக கணக்காளராக திரு. இராச்குமார் குணரட்ணம் அவர்களும் தெரிவானார்கள். இவர்களோடு திரு. அகணி சுரேஷ், திரு. சோதி செல்லா, திருமதி ராஜினி சுபாகரன், திருமதி. கமலவதனா சுந்தா, திருமதி சிவஜோதி ஜெயக்குமார் ஆகியோரும், நிர்வாகத்தில் புதியவர்களாக திருமதி சசிகலா ஜீவானந்தன், திருமதி வாணிஸ்ரீ சிவபாதசுந்தரம் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர். மொத்தத்தில் 11 ஆக இருந்த நிர்வாகசபை அங்கத்தவர்களின் எண்ணிக்கை சபையின் அனுமதியோடு 13 ஆக உயர்த்தப்பட்டது.
அதே சமயம், பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களை காப்பாளர்களில் ஒருவராக இணைத்துக்கொள்ளும் பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்ட நிலையில், அது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, திரு சிந்தனைப்பூக்கள் பத்மநாதன், திரு. சிவபாலு ஆசிரியர் ஆகியோரோடு பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களும் காப்பாளர்களில் ஒருவராக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
நன்றி
நிர்வாக சபை
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம்






















