• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தர்மனில் ராம் பொதினேனி - உறுதிப்படுத்திய ராஷி கண்ணா

சினிமா

கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ படத்தில், தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி நடிப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அது உறுதியாகி உள்ளது.

ரஜினியின் 173வது படம் தர்மன். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தை முதலில் இயக்குநர் சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது. பின்னர் அவர் விலகி தற்போது, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து படத்தை இயக்குகிறார்.

இப்படத்தை கமல்ஹாசனுடன் இணைந்து டர்மரிக் மீடியாவின் ஆர். மகேந்திரனும் தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தில் ரஜினியுடன் இணைந்து சிம்ரன், ராஷி கண்ணா, யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

இச்சூழலில்தான் இப்படத்தில் ராம் பொதினேனி வில்லனாக நடிப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இப்படத்தில் ராம் நடிப்பதை தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் ராஷி கண்ணா. ஆனால் ராம் படத்தில் நடிக்கிறாரா என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

மேலும் அவர் வில்லன் கதாபாத்திரமா என்பதும் உறுதியாக தெரியவில்லை. 
 

Leave a Reply