• Welcome to TamilsGuide
செய்திகள் 1

112 மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைப்பு

இலங்கை

மேல் மாகாணத்தில் 7 வீதிகளின் ஊடாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 112 மெட்ரோ பேருந்துகளை சேவையில் இணைக்கும் வகையிலான நிகழ்வு இன்று (29) முற்பகல் தலங்கமை மெட்ரோ பேருந்து நிலைய வளாகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கத்துடன் இந்த சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. 

நவீன மெட்ரோ பேருந்து சேவையை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டதுடன், இலங்கையின் பொதுப் போக்குவரத்து துறைக்கு நவீன பேருந்து சேவையை அறிமுகப்படுத்துவதற்காக வசதியான 100 தாழ் தளப் பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக 3,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.  தெற்காசியஉடைகளைத் தேர்ந்தெடு

அதன்படி, இந்நாட்டுக்குக் கிடைத்த 104 பேருந்துகளும் ஜப்பான் அரசினால் வழங்கப்பட்ட 08 பேருந்துகளும் இன்று முதல் இவ்வாறு சேவையில் இணைக்கப்பட்டன.

பொதுமக்கள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் தமது பயணங்களைச் சென்றடைய வழிவகுக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தை, நாட்டின் போக்குவரத்துத் துறையில் புதிய மைல்கல்லைப் பதிக்கும் ஒரு நிகழ்வாகப் பாராட்டுகிறேன். 

இதற்குப் பங்களிப்புச் செய்த அனைத்து நட்பு நாடுகளுக்கும், அதனை யதார்த்தமாக்க உழைத்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் லங்கா மெட்ரோ நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

Leave a Reply