• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர்

1.04 Bn dollars powerball winner claims prize: ஒரு மாதம் அமைதியாக இருந்த வெற்றியாளர் இப்போது பரிசை பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் Powerball லொட்டரியில் 1.04 பில்லியன் டொலர் (சுமார் ரூ.8,700 கோடி) ஜாக்பாட் வென்றவர், கிட்டத்தட்ட ஒரு மாதம் பெயர் வெளியிடாமல் இருந்தபின், இறுதியாக பரிசை பெற்றுள்ளார்.

வெற்றியாளர், Quincy Hy-Vee Fast & Fresh என்ற கடையில் 2 டொலர் மதிப்புள்ள Quick Pick டிக்கெட்டை வாங்கியதன்மூலம் இந்த ஜாக்பாட்டை வென்றுள்ளார்.

இது இளினாய்ஸ் மாநிலத்தில் இதுவரை வென்ற இரண்டாவது பெரிய லொட்டரி பரிசு என்றும், Powerball வரலாற்றில் எட்டாவது பெரிய ஜாக்பாட் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெற்றி பெற்றவர் பெயர் வெளியிடாமல் இருக்க Illinois சட்டத்தின் கீழ் உரிமை பெற்றுள்ளார். பரிசை பெறுவதற்கு முன், அவர் பல வாரங்கள் சட்ட மற்றும் நிதி ஆலோசகர்களுடன் ஆலோசித்து, ஒரே முறையில் மொத்த தொகுப்பாக (lump-sum payment) பெற முடிவு செய்தார்.

Illinois Lottery Prize Centre மேலாளர் Amanda Crosas, “எட்டு ஆண்டுகளில் பல வெற்றியாளர்களை சந்தித்துள்ளேன், ஆனால் 1 பில்லியன் டொலர் ஜாக்பாட் என்பது மிக அபூர்வமானது” என்று கூறினார்.

இந்த ஜாக்பாட் மே 4 முதல் ஆகஸ்ட் 12 வரை நடந்த டிராவில் உருவானது. அந்த காலத்தில் Illinois மக்கள் 53.8 மில்லியன் டொலர் மதிப்பிலான Powerball டிக்கெட்டுகளை வாங்கினர். இதன் மூலம் மாநிலத்தின் Common School Fund-க்கு 26 மில்லியன் டொலர் நிதி கிடைத்தது.

வெற்றி பெற்ற டிக்கெட் விற்ற கடைக்கு 500,000 டொலர் பரிசு வழங்கப்பட்டது.
 

Leave a Reply