இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக கருணாரத்னவுக்கு பிடியாணை
இலங்கை
நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிய கிரிக்கெட் வீரர் சமிக கருணாரத்னவை (Chamika Karunaratne) கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிபதி கசுன் கஞ்சன தசநாயக்க இன்று (28) உத்தரவிட்டுள்ளார்.
தனது பிள்ளைக்கு பராமரிப்புக்கோரி ஒரு பெண் விமானியொருவர் தாக்கல் செய்த முறைப்பாட்டின் விசாரணையின்போது அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதை தொடர்ந்து இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குழந்தைக்கான பராமரிப்பு தொகையை சமிக் கருணாரத்ன தமக்கு வாக்குறுதிaளித்தவாறு செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாகவும், தங்களுக்கு பிறந்த 1 வயது குழந்தைக்கு அவர் பராமரிப்பு செலவு (நஷ்டஈடு) வழங்க வேண்டும் என்றும் கூறி குறித்த பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குத் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளுக்குச் சமிக் கருணாரத்ன சமூகமளிக்காமல் நீதிமன்றத்தைப் புறக்கணித்ததால், அவரைக் கைது செய்ய இன்று நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இருப்பினும், கருணாரத்ன தற்போது 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப்பணியில் ஜப்பானில் உள்ளார்.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர் முன்னிலையாகாத காரணத்தினை முறையாக அறிவிக்காமையினால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.






















