• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நதியில் நீர்மட்டம் குறைந்ததால் சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் விலைவாசி

Low water on the Rhine pushes up Swiss prices: ரைன் நதியில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் பல்வேறு பொருட்கள் விலை உயர்ந்துவருகின்றன.

ஐரோப்பிய நதிகள் பலவற்றில் நீர்மட்டம் வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளது. அதனால் ஏற்படும் பாதிப்புகள், விலைவாசி உயர்வில் வந்துமுடியலாம் என துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, எரிபொருள் முதல் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பொருட்கள் வரை ரைன் நதி மூலமாகவே கொண்டுவரப்படுகின்றன.

இந்நிலையில், சுவிஸ் சரக்குப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் ரைன் நதியில் நீர்மட்டம் கணிசமாக குறைந்துள்ளது. 

இப்படி நீர்மட்டம் குறைவதால், கப்பல்களில் குறைந்த அளவிலேயே சரக்குகளைக் கொண்டு செல்லமுடியும். அதனால், பல முறை பொருட்களுடன் கப்பல்கள் பயணிக்கவேண்டியிருக்கும்.

அல்லது, கப்பல்களுக்கு மாற்றாக லொறிகள் மூலம் சரக்குகளைக் கொண்டு செல்லவேண்டியிருக்கும்.

விடயம் என்னவென்றால், லொறிகள் மூலம் சரக்குகளைக் கொண்டு செல்வதற்கான செலவு, நதி மூலம் பொருட்களைக் கொண்டு செல்லும் செலவை விட, 10 மடங்கு கூட அதிகமாகலாம் என்கிறார் துறைசார் நிபுணர் ஒருவர். 

ஏற்கனவே ரைன் நதியில் சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் சுவிட்சர்லாந்தில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன.

அத்துடன், போக்குவரத்து செலவு அதிகரிப்பதால், கட்டுமானப் பணிக்கான, ஜல்லி, சிமெண்ட் போன்ற பொருட்களும் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேல், உணவுப்பொருட்கள் விலையும் அதிகரிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

அதாவது, தானியங்கள் மற்றும் கால்நடைத் தீவனங்கள் ரைன் நதி மூலமாகத்தான் கொண்டுவரப்படுகின்றன.

ஆக, அவற்றைக் கொண்டு வருவதற்கான போக்குவரத்துச் செலவு அதிகரிப்பதால், அந்தச் செலவு நுகர்வோர் தலையில்தான் கட்டப்படும்.

எனவே, முட்டை, மாமிசம் மற்றும் பாண் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply