திருமணம் பற்றிய கேள்வி... நடிகை அஞ்சலி சொன்ன பதில்...
சினிமா
கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.
ராம் இயக்கிய இந்த படத்தில் ஆனந்தி கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகச்சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றார். முதல் படத்திலேயே கவனம் பெற்றவர் அடுத்தடுத்து நிறைய ஹிட் படங்கள் கொடுத்து வந்தார்.
இடையில் தமிழ் சினிமாவில் காணாமல் போன அஞ்சலி மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். விஷாலுடன் மகுடம், இயக்குனர் ராமின் ஏழு கடல் ஏழு மலை என படங்கள் நடித்துள்ளார்.
அடுத்தடுத்து பிஸியாக படங்கள் நடித்துவரும் அஞ்சலியிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் திருமணம் பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், என் கல்யாணம், நான் பண்ணிப்பேன், மத்தவங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறைன்னு புரியல. கல்யாணம்ங்கிறது ஒரு நாள் கொண்டாட்டம் கிடையாதுன்னு அஞ்சலி தனது ஸ்டைலில் ஜாலியா சொல்லியிருக்காங்க.






















