• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எரிபொருளுக்கு ரூ.41 பில்லியன் மானியம் - கம்பஹாவில் ஜனாதிபதி

இலங்கை

அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்காக 41 பில்லியன் ரூபாயை அரசாங்கம் ஒதுக்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று (27) அறிவித்தார்.

இந்த நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி கோரும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று நாளை (இன்று) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

அதன்படி, ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் எரிபொருள் விலை சலுகைகள் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கம்பஹாவில் நேற்றைய தினம் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் ‘நமது அரசாங்கம்’ ‘ஈராண்டு ஆட்சி – நாட்டிற்கு மாட்சி’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்றப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் மோதலால் எரிபொருள் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஏற்கனவே 100 பில்லியன் ரூபாயை ஒதுக்கியிருந்ததையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

Leave a Reply