• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

இலங்கை

சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிதூவ பிரதேசத்தில் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் நேற்று (27) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 47 வயதுடைய சேருநுவர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

உயிரிழந்தவர் வீட்டின் முன்பாக நின்றுகொண்டிருந்தபோது காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply