• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இமயமலை பனிச்சரிவில் சிக்கி 10 பேர் மாயம்

நேபாளத்தின் மனாங் மாவட்டத்தில் உள்ள ஹிம்லுங் ஹிமல் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 மலையேற்ற வீரர்கள் மாயமாகியுள்ளனர்.

நேபாளத்தில் இருந்து இமயமலை ஏறச் சென்ற குறித்த 10 மலையேற்ற வீரர்களும் ஹிம்லுங் ஹிமல் சிகரத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்துள்ளனர்.

இதன்போது திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் அவர்கள் தங்கியிருந்த கூடாரம் பனியில் புதைந்துள்ளது. இதனால் அதில் தங்கியிருந்த 10 மலையேற்ற வீரர்களும் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து, மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று மாயமான மலையேற்ற வீரர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.740
 

Leave a Reply