• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் கைப்பற்றப்பட்ட பெருமளவான போதைப்பொருள் தொடர்பான அப்டேட்

இலங்கை

வடக்குக் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் பெருமளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பிலான மேலதிக தகவலை இலங்கை கடற்படை வெளியிட்டுள்ளது. தெற்காசியஉடைகளைத் தேர்ந்தெடு

கடற்படையினர் இன்று (27) காலை யாழ்ப்பாணம் மாதகல், குசுமன்துறை கடற்கரைப் பகுதியில் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் நிபுணத்துவப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் இந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டது.

குறித்த போதைப்பொருள் தொகுதியில் 45.5 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 35.7  கிலோ கிராம் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.

இந்த விசேட நடவடிக்கையின் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், போதைப்பொருட்களைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply