• Welcome to TamilsGuide
செய்திகள் 1

AI க்கு கடுமையான கட்டுப்பாடுகள் தேவை - பில்கேட்ஸ் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதனை தவறானவர்கள் பயன்படுத்தினால் மிகப்பெரிய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் பல்வேறு பணிகளை குறுகிய நேரத்தில் செய்து முடிப்பதுடன், மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

அதேவேளை, வேலைவாய்ப்புகள் மீது அதன் தாக்கம் குறித்தும் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஏஐ தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் கிடைக்கும் நன்மைகளுடன், அதன் தவறான பயன்பாட்டால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என பில்கேட்ஸ் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான நபர்களின் கைகளில் ஏஐ தொழில்நுட்பம் சிக்கினால், அது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய சக்தியாக மாறக்கூடும் என்றும், இதுபோன்ற ஆபத்துகளைத் தடுக்க ஏஐ நிறுவனங்களின் சுயக்கட்டுப்பாடு மட்டும் போதாது என்றும் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்கு அரசுகள் தலையிட்டு உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் பில்கேட்ஸ் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஐயின் வளர்ச்சி மனிதகுலத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியதாக இருந்தாலும், அதன் தவறான பயன்பாட்டைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த விவாதங்கள் உலகளவில் தீவிரமடைந்து வருகின்றன.
 

Leave a Reply