• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போப் வருகை - கடும் பாதுகாப்பில் பிரான்ஸ்

பிரான்ஸ் பரிஸ் நகரில் உள்ள la Concorde மற்றும் Champs-Élysées பகுதிகளில் போப் Léon XIV தலைமையில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட திருப்பலியில் சுமார் 6 இலட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு நகரம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வதால் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

திருப்பலி நடைபெறும் பகுதிகளைச் சுற்றி சுமார் 10 கிலோமீற்றர் நீளத்துக்கு பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், நிகழ்வின் போது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதற்காக சுமார் 14,000 காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். போப்பாண்டவரின் வருகையை முன்னிட்டு பரிஸ் நகரில் முன்னெடுக்கப்படும் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை, அண்மைக்காலத்தின் மிகப்பெரிய ஏற்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பெருமளவிலான மக்கள் திரளவுள்ளதால், நிகழ்வு நடைபெறும் பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Leave a Reply