• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்க தளங்களை தாக்க சீன செயற்கைக்கோள் பயன்படுத்திய ஈரான்

கடந்த ஜூலை​யில் ஜோர்​டான் நாட்​டில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை ஈரான் ராணுவம், சீன ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் மூலம் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதில் அமெரிக்க ராணுவ தளத்​துக்கு பெரும் சேதம் ஏற்​பட்​டது. 3 வீரர்​கள் உயி​ரிழந்​தனர். சீன உளவு செயற்கைக்கோள்​களின் உதவி​யால் ஈரான் ராணுவம் தாக்​குதல் நடத்​தி​யிருப்​பதை அமெரிக்க ராணுவ வட்​டாரங்​கள் உறுதி செய்​துள்​ளன.

மேலும் ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக செல்​லும் கப்​பல்​களை​யும் சீன செயற்​கைக்​கோள்​களின் உதவி​யுடன் ஈரான் ராணுவம் கண்​காணித்து வரு​கிறது. இதன்​மூலம் எதிரி​களின் கப்​பல்​கள் மீதும் அந்த நாடு மிகத் துல்​லிய​மாக ஏவு​கணை, ட்ரோன் தாக்குதல்களை நடத்​துகிறது.

சீனா​வின் உதவி இல்​லாமல் ஈரான் ராணுவத்​தால் அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது மிகத் துல்லியமாக தாக்​குதல் நடத்​தி​யிருக்க முடி​யாது என்றும் அமெரிக்கா ஆணித்தரமாக கூறியுள்ளது.

இது தொடர்பில் அமெரிக்​கா​வின் வால் ஸ்டிரீட் ஜர்​னல் வெளி​யிட்ட செய்​தி​யில் , ஈரான் ராணுவத்​தின் முது​கெலும்​பாக ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் உள்​ளன. இவற்றை தயாரிப்​ப​தற்​கான உதிரி பாகங்​கள் சீனா​வில் இருந்து ஈரானுக்கு அனுப்பி வைக்​கப்​பட்டு உள்​ளன.

கடந்த பிப்​ர​வரி முதல் ஜூன் மாதம் வரையி​லான காலத்​தில் சீனா​வில் இருந்து 1,300 முறை விமானங்​கள், கப்​பல்​கள் மூலம் உதிரி பாகங்​கள் ஈரானுக்கு அனுப்​பப்​பட்டு உள்​ளன.

ஜிபிஎஸ் கருவி​கள், விமான இன்​ஜின்​கள், மோட்​டார்​களும் சீனா​வில் இருந்து ஈரானுக்கு கொண்​டு செல்​லப்​பட்​டு உள்​ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

அதேவேளை அமெரிக்கா​வுக்கு சீன அதிபர் ஜி ஜின்​பிங் சுற்​றுப் பயணம் மேற்​கொண்டுள்ள நிலையில் இத்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply