• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டிராகன்-2 படத்தின் போஸ்டர் உண்மையானது அல்ல- தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

சினிமா

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோகர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்து கடந்த ஆண்டு வெளியாகி 'ஹிட்' அடித்த படம், 'டிராகன்'.

ரசிகர்களின் பெரும் விருப்பத்துக்குரிய படமாக அமைந்த டிராகன் படத்தின் 2-ம் பாகம் தயாராவதாகவும், இதற்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வெளியானது. இதுதொடர்பான படத்தின் சில போஸ்டர்களும் வெளியானது.

இதனை படத்தின் தயாரிப்பு குழுவினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். "அந்த போஸ்டர் போலியானது. உண்மை அல்ல. அதை படக்குழு வெளியிடவில்லை. அதை நம்பவோ, பகிரவோ வேண்டாம்”, என அந்த விளக்கத்தில் படக்குழு தெளிவுபடுத்தி இருக்கிறது.
 

Leave a Reply