• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிலிண்டர் வெடித்ததில் வைத்தியசாலை ஊழியர்கள் ஏழு பேர் காயம்

இலங்கை

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

வைத்தியசாலை சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த சிறுநீரக வைத்தியசாலை ஊழியர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடிப்புச் சம்பவத்தால் வைத்தியசாலை கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (26) அதிகாலை சுமார் 4:00 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.

இதில் காயமடைந்தவர்கள் சமையலறையில் பணிபுரிந்த ஊழியர்கள் ஆவர்.

காயமடைந்தவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தக் சிறுநீரக வைத்தியசாலையில் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கோ அல்லது அங்குப் பணியில் இருந்த வைத்தியப் பணியாளர்களுக்கோ அந்த வெடிப்பினால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

விபத்தினை அடுத்து இன்று அதிகாலையில், வைத்தியசாலை ஊழியர்கள் நோயாளிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அவர்களுக்குத் தேவையான சிகிச்சையை வழங்கவும், மேலதிக சிகிச்சைக்காகப் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

Leave a Reply