கனடவில் மான் மீது வாகனம் மோதி 20 வயது இளைஞர் பலி
கனடா
கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், சட்பரி பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 17-இல் நடைபெற்ற வீதி விபத்தில் 20 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை இரவு சுமார் 9:15 மணியளவில், நெடுஞ்சாலை 144 சந்திப்பிற்கு மேற்கே உள்ள நெடுஞ்சாலை 17-இல், பயணிகள் வாகனம் ஒன்று காட்டு மான் மீது மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
சட்பரியைச் சேர்ந்த 20 வயதான ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.
விபத்து தொடர்பாக பொலிஸார் கள ஆய்வுகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலை 17-இன் கிழக்கு நோக்கிய பாதைகள் சுமார் எட்டு மணி நேரம் மூடப்பட்டிருந்தன.






















