• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டிரம்பின் வழக்கறிஞரை திருமணம் செய்யும் துருக்கி பில்லியனர்

Trump lawyer Alina Habba marries turkish billionaire: டிரம்பின் வழக்கறிஞரை துருக்கி பில்லியனர் ஒருவர் திருமணம் செய்யவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் முக்கிய வழக்கறிஞராக பணியாற்றிய அலினா ஹப்பா (42), துருக்கி வணிகக் குடும்பத்தைச் சேர்ந்த துர்ஹான் மில்டன் (29) என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இது ஹப்பாவின் மூன்றாவது திருமணம் ஆகும்.

ஹப்பா, தனது இரண்டாவது கணவரை மார்ச் மாதத்தில் விவாகரத்து செய்த பின்னர், பாம் பீச் பகுதியில் துர்ஹான் மில்டனுடன் காணப்பட்டார்.

திருமண விழா மிகுந்த பாதுகாப்புடன் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம், டிரம்ப் நிர்வாகத்தின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் சில வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

திருமண மோதிரமாக ஹப்பா, 23 காரட் வைர மோதிரம் அணிந்திருப்பது ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், அவர் 30,000 யூரோ மதிப்புள்ள Hermès Birkin பை ஒன்றையும் வைத்திருந்தார். இது மில்டன் வழங்கிய பரிசுகளில் ஒன்றாகும்.

மில்டன், 2024-இல் தனது முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து செய்தவர். அவர் ஹப்பாவை 2026-இல் ஜான் எப். கென்னடி கலை மையத்தில் நடந்த நிகழ்வில் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹப்பாவின் குழந்தைகள் குளோய் மற்றும் லூக், மில்டனை மிகவும் விரும்புகின்றனர் என நெருங்கியவர்கள் கூறுகின்றனர். திருமணத்திற்குப் பிறகு, இருவரும் புளோரிடாவில் வாழ திட்டமிட்டுள்ளனர்.

ஹப்பா, டிரம்பின் சட்ட குழுவில் முக்கிய பங்கு வகித்தவர். அவர் நியூ ஜெர்சி மாநிலத்தின் acting U.S. attorney-ஆக நியமிக்கப்பட்டிருந்தாலும், அந்த நியமனம் சட்டரீதியாக செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த திருமணம், அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.  
 

Leave a Reply