• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரான்சில் புதிய கோவிட் அலை

A new wave of Covid-19 is hitting France: பிரான்சில் புதிய கோவிட் அலை ஒன்று உருவாகியுள்ளது.

பிரான்ஸ் முழுவதிலுமுள்ள 54 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா வைரஸ் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளதாக பிரான்ஸ் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

என்றாலும், கோவிட் தொற்றுக்காக மருத்துவர்களைக் காணவருவோர் எண்ணிக்கை சற்று மட்டுமே அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

ஆரோக்கியமான இளம் மற்றும் நடுத்தர வயதினர் இந்த கோவிட் குறித்து கவலைப்படவேண்டியதில்லை. எளிதில் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்திலுள்ளவர்கள் மற்றும் முதியவர்களும் ஏற்கனவே தடுப்பூசி போட்டுள்ளதால் அவர்களுக்கும் பாதுகாப்பு இருக்கும். 

ஆக, எளிதில் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்திலுள்ளவர்கள் கூட்டம் அதிகமிருக்கும் இடங்களுக்கு செல்லும்போது கையுறை, முகக்கவசம் போன்றவற்றை அணிந்துகொள்ளுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வது நல்லது என்கிறார்கள் அதிகாரிகள்.

இந்நிலையில், பிரான்சில் கோவிட் மற்றும் ப்ளூ தடுப்பூசி வழங்கும் விடயம் விரைவில் துவக்கப்பட உள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. 
 

Leave a Reply