திலீபனின் நினைவு தினத்தில் யாழ்பல்கலை மாணவர்கள் குருதிக்கொடை
இலங்கை
தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தில் யாழ் பல்கலையில் இரத்ததான முகாமொன்று இன்றையதினம்(24) நடைபெற்றது.
திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் பல்வேறு இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தியாக தீபம் திலீபனின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இரத்ததான முகாமும் இடம்பெற்றது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அதிகமானோர் இணைந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
இதேவேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் ஏற்பாட்டில் நாளையதினம் வெள்ளிக்கிழமை அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஊடக சந்திப்பு யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று முன்னெடுக்கப்பட்டது.





















