• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹோர்முஸ் நீரிணை விவகாரம் - ஈரானுக்கு எதிராக மத்திய கிழக்கு நுண்ணறிவு நிறுவனம் கடும் விமர்சனம்

ஈரான் நாட்டின் ஹோர்முஸ் நீரீணை உத்தியை பிராந்திய நாடுகள் தங்களது பலத்தை உறுதிப்படுத்தும் ஒரு பேச்சுவார்த்தை கருவியாகவே பார்ப்பதாக மத்திய கிழக்கு நுண்ணறிவு நிறுவனத்தின் (Middle East Insights Institute) நிறைவேற்றுப் பணிப்பாளர் முகமது அல்-ஹாஷெமி தெரிவித்துள்ளார்.

ஐ.நா பொதுச்சபை கூட்டத் தொடரில் (UNGA) உரையாற்றிய ஈரானிய ஜனாதிபதி பெசெஷ்கியான், பிராந்திய விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு இன்றி நாடுகள் சுமுக தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தக் கோரிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த அல்-ஹாஷெமி, வளைகுடா நாடுகள் மீது ஏவுகணைகள் மற்றும் கருத்துக்கள் மூலம் தாக்குதல் நடத்திய ஒரு நாட்டவரிடமிருந்து இத்தகைய அறிக்கை வருவது வேடிக்கையானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிராந்தியத்தில் நல்ல எண்ணத்தை வெளிப்படுத்தவும் அமைதியை நிலைநாட்டவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மிகவும் அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

Leave a Reply