ராம் குமார் - விஷ்ணு விஷால் கூட்டணியில் 3வது படம் - இரண்டு வானம் வெளியீடு தேதி அறிவிப்பு
சினிமா
‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ படங்களை இயக்கிய ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி உள்ளப் படம் ‘இரண்டு வானம்’.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில், டி.ஜி. தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. படம் காதல் கதையை மையமாக கொண்டதாக தெரிகிறது. இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படம் அக்டோபர் 23ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஹிட் படங்களை கொடுத்த விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் கூட்டணியில் வெளியாகும் மூன்றாவது திரைப்படம் என்பதால், ரசிகர்களிடையே இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.






















