• Welcome to TamilsGuide
செய்திகள் 1

என்னை ஒருவர் ஓடும் இரயில் தள்ளிவிட பார்த்தார், ராம் கூறிய அதிர்ச்சி தகவல்

சினிமா

ராம் தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புகளை எடுத்தவர். இவரின் படங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இவர் யாரும் பேசாத பேச விரும்பாத பல தைரியமான விஷயங்களை தன் படங்களின் வாயிலாக பேசி வருகிறார்.

இந்நிலையில் ராம் இயக்கத்தில் அக்டோபர் 2-ம் தேதி நிவின் பாலி, சூரி நடிப்பில் 7 கடல் 7 மலை என்ற படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், தன் 20 வயதில் செகண்ட் ஷோ பார்த்துவிட்டு சென்று கொண்டிருந்த போது, நானும் 35 வயதுள்ள ஒரு ஆள் மட்டும் இருந்தோம்.

அப்போது அவர் என் அருகில் வந்து திடீரென என்னை ட்ரெயினில் இருந்து கீழே தள்ளிவிட முயன்றார், நானும் எவ்வளவு கஷ்டப்பட்டு தாக்குபிடிக்க, ஸ்டேஷன் வந்ததும் அவர் ஓடிவிட்டார், பிறகு இன்ஜின் டிரெவரிடம் இதுக்குறித்து சொல்கையில், இப்படி சிலர் இருப்பார்கள் என்றார், அன்று இரவு முழுவதும் பயத்துடனே இருந்தேன்.

அதன் பிறகு என்னை தள்ளிவிட முயன்ற நபரை நான் ஒரு நாளும் பார்க்கவில்லை, அவர் ஏன் இப்படி செய்தார் என்றே புரியவில்லை, பல வருடம் கழித்து யோசிக்கையில் மனித இயல்பிலேயே இது இருக்கிறது என புரிய வந்தது என ராம் ஒரு ஷாக்கிங் தகவலை கூறியுள்ளார். 
 

Leave a Reply