நான் உண்மையை கூறினால் ராதா சிறைக்கு செல்ல வேண்டும் - அம்பிகா பரபரப்பு பேட்டி
சினிமா
நடிகை ராதா தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தன்னுடைய பழைய காசோலைகளை தன்னிடம் கேட்காமலேயே பயன்படுத்தி சுமார் 46 கோடி ரூபாய் பணத்தை பெற முயற்சி செய்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த புகார் தொடர்பாக இணையத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தன்னுடைய தரப்பு விளக்கத்தை நடிகை அம்பிகா அளித்துள்ளார்.
ராதா மற்றும் அம்பிகா
தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் நடிகைகள் ராதா மற்றும் அம்பிகா. சகோதரிகளான இருவரும் அந்தக் காலகட்டத்தில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தனர்.
முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து பல வெற்றிப் படங்களை வழங்கிய ராதா மற்றும் அம்பிகா, 80-களின் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகைகளாக இருந்தனர்.
குறிப்பாக, இருவரும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்ததால், அப்போது ரசிகர்கள் மத்தியில் இந்த சகோதரிகள் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது.
திரையுலகில் இருந்து ஓரளவு விலகிய பின்னரும், ராதா தொடர்ந்து ஊடகங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றி வருகிறார். குறிப்பாக, பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் கலந்து கொண்டு வருகிறார்.
மறுபுறம், அம்பிகாவும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி தொடர்ந்து நடித்து வருகிறார். இருவரும் சகோதரிகள் என்ற முறையில் நீண்ட காலமாக ஒன்றாக இருந்து வந்த நிலையில், தற்போது அவர்களுக்குள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் நடிகை ராதா தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்நதார்.
குறித்த புகாரில், ரூ.46 கோடி பணம் தொடர்பாக காசோலை மூலம் மோசடி நடைபெற்றதாக ராதா குற்றம்சாட்டியதுடன், தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் இணைந்து பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவரே ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார்.
பல ஆண்டுகளாக திரையுலகில் சகோதரிகளாக இணைந்து பயணித்த ராதா மற்றும் அம்பிகா இடையிலான இந்த விவகாரம் தற்போது காவல்துறை புகார் வரை சென்றிரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து நடிகை அம்பிகா தற்போது தன தரப்பு நியாயத்தை வெளிப்படையாக பேசியுள்ளார்.
தனது சகோதரி ராதா புகார் அளித்தது குறித்து நடிகை அம்பிகா பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர், அவர் தான் காசோலை வழங்கினார், அதை வங்கியில் நிறுத்தியதும் ராதா தான். போரூர் ஏஆர்எஸ் கார்டன் யாருக்கு சொந்தம் என்பதில் தான் பிரச்சனை, அந்த சொத்தில் இருந்து எனது பெயரை நீக்கிவிட்டனர்.
ராதா தரப்பில் இருந்து எனக்கு ரூ. 97 கோடி வர வேண்டும், சொத்துக்களை பிரித்த வகையில் ராதா எனக்கு 5 காசோலைகளை வழங்கினார். அவரே கொடுத்துவிட்டு வங்கியில் அதை அவரே நிறுத்தியும் உள்ளார். உண்மையில் பணம் போனது எனக்கு தான்.
ராதாவின் சொத்து மதிப்பு ரூ. 5000 கோடி, நான் உண்மையை கூறினால் ராதா சிறைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என பரபரப்பு பேட்டி கொடுத்துள்ளார்.குறித்த விடயம் தற்போது இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்து.






















