• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இயக்குநர் ராமின் ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் புது அப்டேட்

சினிமா

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் "ஏழு கடல் ஏழு மலை" திரைப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை டிரிபிள் எம் புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் உருவாகி இருக்கிறது.

இயக்குநர் ராம் எழுதி, இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த திரைப்படம் 2026 அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தமிழ் திரைப்படங்களை GCC மற்றும் சர்வதேச ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், இந்திய திரையுலகுக்கும் வெளிநாட்டு சந்தைகளுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் டிரிபிள் எம் புரொடக்ஷன் செயல்பட்டு வருகிறது.

திரைப்பட தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு விநியோகத்தில் கவனம் செலுத்தி வரும் டிரிபிள் எம் புரொடக்ஷன் தமிழ் திரையுலகில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. அந்த வகையில் இராணி, நிறம் மாறும் உலகில், ஏஸ், அக்கெணம், பன் பட்டர் ஜாம் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் டிரிபிள் எம் புரொடக்ஷன் இணைந்து பணியாற்றியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் உள்ளிட்ட GCC நாடுகளிலும் திரைப்பட வெளியீடு மற்றும் விநியோக பணிகளை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, மதி வி.எஸ். படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். பாடல்களை மதன் கார்க்கி மற்றும் மதி புகழேந்தி எழுத, சண்டை காட்சிகளை ஸ்டன்ட் சில்வா படமாக்கியுள்ளார். நடன இயக்க பணிகளை சாண்டி மாஸ்டர் மேற்கொண்டுள்ளார்.
 

Leave a Reply