• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சவூதி சிறையில் உள்ள அனோஜனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சஜித்

இலங்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கையரான சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) கொழும்பில் சந்தித்துள்ளார். 

அனோஜனின் தந்தை, தாய் மற்றும் சகோதரர் ஆகியோர், அனோஜனின் நிலைமை மற்றும் அவரை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். 

இந்த சந்திப்பின் போது, சஜித் பிரேமதாச ​​இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அனோஜனின் வழக்கு குறித்தும் அவரை விடுதலை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விசாரித்துள்ளார். 

மேலும் அவர், சவூதி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனோஜனைத் தொடர்புகொண்டு அவரது நலம் விசாரித்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அனோஜனுக்கான விடுதலையைப் பெறுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்த தகவல்களைப் பெறுவதற்காக, அவர் பின்னர் இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளரிடம் உரையாடியுள்ளார்.  தெற்காசியஉடைகளைத் தேர்ந்தெடு

அத்துடன், இன, மத வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், அனோஜனை விடுதலை செய்ய தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் அவரது குடும்பத்தினருக்கு உறுதியளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 
 

Leave a Reply