• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்காவின் தடைகளால் இருளில் மூழ்கிய கியூபா

அமெரிக்காவின் எரிசக்தித் தடையால் பாதிக்கப்பட்டுள்ள கியூபாவில், மீண்டும் ஒரு பெரும் தேசிய மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால்  நாடு இருளில் மூழ்கியுள்ளது.

நாட்டின் மத்திய பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த மின்கடத்திப் பாதைகளில் ஏற்பட்ட கோளாறு மற்றும் மோசமான வானிலை காரணமாகவே இந்த மின்கட்டமைப்பு முடக்கம் ஏற்பட்டுள்ளது.

2024 பிற்பகுதிக்குப் பிறகு நிகழ்ந்த 12வது பிரதான மின்வெட்டான இது, நடப்பு ஆண்டில் மட்டும் ஏற்படும் 6வது சம்பவமாகும்.

இதனால் மக்கள் குடிநீர், சமையல் எரிவாயு மற்றும் மின்சாரமின்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தலைநகர் ஹவானாவில் பாதிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும், நிலைமைக்கேற்ப படிப்படியாக மின்சாரம் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் 'யூனியன் எலக்ட்ரிகா' (UNE) நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த எண்ணெய்த் தடையால் கியூபா ஒரு "அமைதியான காசாவாக" மாறும் அபாயம் உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply