• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு

இலங்கை

இன்று (20) மதியம் முதல் பெய்து வரும் கனமழையால் ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் வனராஜா கெந்தகொளை கிறிஸ்தவ தேவாலயம் பகுதியில் பாரிய மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஹட்டன் பொகவந்தலாவ ஹட்டன் சாமிமலை ஹட்டன் மஸ்கெலியா ஹட்டன் நோர்வூட் பகுதிகளுக்கு செல்லும் பிரதான வீதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டு உள்ளது.

சம்பந்தப்பட்ட பகுதிக்கு நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் மற்றும் ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோளுக்கு இணங்க சரிந்த மண் திட்டுகள் அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மண் திட்டுகள் அகற்ற பட்ட பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.
 

Leave a Reply