தர்மம் ஒருவருடைய இல்லத்திலிருந்து தான் புறப்படுகிறது
எம்..ஜி.ஆர். சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ‘நாடோடி மன்னன்’எடுத்துக் கொண்டிருந்த 1957 காலகட்டம் அது. அந்த சமயத்தில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலிருந்து செல்வராஜ் என்ற ஓர் இளைஞர் – எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் – அவரை நேரில் பார்த்து பேசி மகிழவேண்டும் என்று ஆவல் கொண்டு சென்னைக்குப் புறப்பட்டு வந்தார். எம்.ஜி.ஆரின் ‘தாய் வீடு’ இல்லம் அமைந்திருந்த ‘லாயிட்ஸ்’ ரோட்டில் (தற்போதைய அவ்வை சண்முகம் சாலை) அவர் வீட்டின் எதிரே நடைபாதையில், தினமும் நின்று கொண்டு எம்.ஜி.ஆர். முகத்தைக் காண ‘தவம்’ இருந்தார்.
எம்.ஜி.ஆர். வீட்டைவிட்டுப் புறப்படும்போதும், திரும்பி வீட்டிற்கு வரும்போதும் கார் கதவின் கண்ணாடி முழுவதுமாக ஏற்றப்பட்டிக்கும். இதனால் அவர் முகத்தைச் சரியாகப் பார்க்க முடியாமல் செல்வராஜ் தவித்தார். உள்ளே இருந்தபடி தினமும் அவரைக் கவனித்த எம்.ஜி.ஆர்., ஒருநாள் காரை அவர் அருகில் நிறுத்தச் செய்து கதவின் கண்ணாடியை இறக்கி அவரைப் பார்த்துக் கேட்டார்:-
எம்.ஜி.ஆர்:- நீ யாரு? தினமும் ஏன் இங்கேயே நின்னுகிட்டிருக்கே? உனக்கு என்ன வேணும்? செல்வராஜ்:- (கும்பிட்டு) என் தெய்வமே! நான் உங்கள் பக்தன். உங்களைத் தரிசிக்கிறதுக்காக குமாரபாளையத்தில் இருந்து வந்து தினமும் இங்கே தவம் இருக்கிறேன்.
இன்னிக்குத்தான் உங்களைப் பார்க்கிற பாக்கியம் எனக்குக் கிடைத்தது. எம்.ஜி.ஆர்:- சரி. கார்ல உட்காரு என்று கூறி முன் கதவை திறந்து விட்டார். அவ்வளவுதான். பக்தர் செல்வராஜ் உள்ளே பாய்ந்து உட்கார்ந்து விட்டார். எம்.ஜி.ஆரின் கார் கோடம்பாக்கம் வாஹினி ஸ்டூடியோவிற்குள் நுழைந்து, மேக்-அப் அறைகளுக்கு அருகில் நின்றது. எம்.ஜி.ஆரோடு சேர்ந்து செல்வராஜூம் காரிலிருந்து இறங்கி வேரறுந்த மரம் போல ‘தடால்’ என்று நெடுஞ்சாண் கிடையாக, அவர் காலடியில் குப்புற விழுந்தவர் எழுந்திருக்கவே இல்லை. வேறு வழியின்றி எம்.ஜி.ஆர். குனிந்து அவரைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினார். கள்ளங்கபடம் இல்லாத அந்த அப்பாவியின் கண்களிலிருந்து கங்கை கரை புரண்டது! அதைக்கண்ட எம்.ஜி.ஆர். இதயம் இளகிப்போய் தன் அன்புக்கரங்களால் அவர் கண்ணீரைத் துடைத்து விட்டு…
எம்.ஜி.ஆர்:- உன் பேரென்ன?
செல்வராஜ்:- செல்வராஜ்.
எம்.ஜி.ஆர். செல்வராஜின் முகத்தை ஒரு கணம் உற்று நோக்கி அதில் ஒருவித வெகுளித்தனமும், கோமாளித்தனமும் நிறைந்திருப்பதைக் கவனித்து:-
எம்.ஜி.ஆர்:- உனக்கு நடிக்க வருமா?
செல்வராஜ்:- நல்லா நடிப்பேண்ணே. ஊர்ல பள்ளிக்கூட நாடகத்துல நிறைய நடிச்சிருக்கேன். எம்.ஜி.ஆர்:- என்ன வேஷம் போடுவே? செல்வராஜ்:- காமெடி வேஷம் போட்டு கற்பனையா பேசி எல்லோரையும் சிரிக்க வைப்பேன். எம்.ஜி.ஆர்:- (புன்னகையுடன்) அப்படியா? சரி. நீ இங்கேயே இரு. தினமும் காலையில் வந்து ஷ¨ட்டிங்ல கலந்துக்க. உன்னை கம்பனியில் கவனிச்சுக்குவாங்க. செல்வராஜ்:- ரொம்ப நன்றிங்கண்ணே. எம்.ஜி.ஆர்:- (உதவித் தயாரிப்பு நிர்வாகியைக் கூப்பிட்டு) இந்தப் பையனுக்கு மேக்-அப் போட்டு நம்ம கம்பெனி நடிகர் குழுவோட சேத்துவச்சிக்க. தினமும் அவனுக்குச் சாப்பாடு மத்த சம்பள விஷயத்தையும் கவனிச்சிக்க. பாவம்! வெளியூர்லேருந்து வந்திருக்கான்.
நிர்வாகி:- சரிங்கண்ணே. நான் பார்த்துக்குறேன். எங்கிருந்தோ வந்த இளைஞர் செல்வராஜ் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நடிகர் குழுவில் இடம் பெற்று நாளடைவில் அவருடைய இதயத்திலும் இடம் பெறலானார். ஒருநாள் எம்.ஜி.ஆர். அவரை அழைத்து:- எம்.ஜி.ஆர்:- நீ தமிழ் நல்லா பிழை இல்லாம எழுதுவியா?
செல்வராஜ்:- எழுதுவேண்ணே.
எம்.ஜி.ஆர்:- எங்கே? ஏதாவது எழுதிக்காட்டு என்று உதவி இயக்குநரிடமிருந்து பேப்பர் பேடை வாங்கிக்கொடுக்க, செல்வராஜ் அதில், என் தெய்வம் எம்.ஜி.ஆர். வாழ்க’ வள்ளல் எம்.ஜி.ஆர். வாழ்க’‘என்னை ஆதரித்து அன்பு காட்டிய அண்ணன் எம்.ஜி.ஆர். வாழ்க! வாழ்க! நீடூழி வாழ்க!’என்று எழுதிக்காட்ட அதைப்பார்த்த எம்.ஜி.ஆர். வாய்விட்டுச் சிரித்து:-
எம்.ஜி.ஆர்:- ஏம்பா? ஏதாவது எழுதுன்னு சொன்னா எனக்கு வாழ்த்து பாடி இருக்கியே. பரவாயில்லை. குண்டு குண்டா கையெழுத்து அழகா இருக்கு. (உதவி இயக்குநரிடம்) இவனை உன்னோட வச்சிக்கிட்டு, வசனங்களை காப்பி எடுக்கிறது, கிளாப் அடிக்கிறது, கன்டினியூட்டி எழுதுறது, எல்லா வேலையும் கத்துக்கொடு. அதோடகூட சின்னச்சின்ன நகைச்சுவை வேஷங்கள்ளேயும் மேக்கப் போட்டு நடிக்க வைச்சிப் பார்த்துக்க. உதவி டைரக்டர்:- நல்லதுங்கண்ணே!
அவ்வளவுதான். அடுத்த நாளிலிருந்து குமாரபாளையம் செல்வராஜ் கோடம்பாக்கம் வாஹினி ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ‘நாடோடி மன்னன்’படத்தில் டைரக்டர் எம்.ஜி.ஆரின் குழுவில் இடம் பெற்று மாதச் சம்பளத்தில் ‘அஸிஸ்டெண்ட் டைரக்டர்’ ஆகிவிட்டார். செல்வராஜின் இடுப்பில் கட்டியிருந்த கைத்தறி நாலுமுழ வேஷ்டிக்குப் பதிலாக இப்பொழுது முழுக்கால் ‘பேண்ட்’ சட்டை ஏறிவிட்டது. முகமும் மாறிவிட்டது.
முற்காலத்தில் தமிழில் ‘அடைப்பக்காரன்’ என்ற ஒரு சொல் உண்டு. பெரும் செல்வந்தர்கள், மிட்டா மிராசுதாரர்கள், ஜமீன்தார்களின் பக்கத்தில் வெற்றிலைப் பெட்டி, கைதுடைக்கும் துணி முதலியவற்றை வைத்துக்கொண்டு நிற்கும் சிப்பந்திக்கு ‘அடைப்பக்காரன்’ என்று பெயர். அதைப்போல இந்த செல்வராஜ் உதவி இயக்குநர் மற்றும் நகைச்சுவை நடிகர் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்ட அந்தஸ்து நிலையில் எம்.ஜி.ஆரின் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாகி, அன்றாடம் ஸ்டூடியோவில், படப்பிடிப்பில் அவருக்கு உண்மையான உள்ளத்துடன் ஊழியம் புரிந்தார். எம்.ஜி.ஆர். தனிப்பட்ட முறையில் தனக்காக வீட்டிலிருந்து கொண்டு வரும் பணம், அவருடைய மூக்குக்கண்ணாடி மற்றும் முக்கிய பொருள்களை செல்வராஜிடம்தான் கொடுத்து வைத்திருப்பார். வாழ்க்கையில், உண்மையான அன்பு உள்ள ஒருவரிடத்தில் அதிக நம்பிக்கை இருக்கும். அதைப்போல உண்மையான நம்பிக்கை உள்ள ஒருவரிடத்தில் அதிக அன்பும் இருக்கும். அன்பும், நம்பிக்கையும் உடன் பிறந்தவை! இது அனுபவபூர்வமான உண்மை!
அந்த அளவிற்கு எம்.ஜி.ஆரின் பாசத்திற்குப் பாத்திரமான உதவி இயக்குநர் மற்றும் நகைச்சுவை நடிகர்தான் என் அன்பிற்கினிய அருமைத்தம்பி ‘இடிச்சபுளி’ செல்வராஜ்...
ஒரு படத்தில் ‘இடிச்சபுளி’ என்று பெயர் கொண்ட நகைச்சுவை வேடத்தில் நடித்ததை வைத்து அவருக்கு ‘இடிச்சபுளி’ என்ற ஒட்டுப்பெயர் உண்டானது.
பின்நாட்களில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த தம்பி ‘பாண்டு’, செல்வராஜின் சகோதரர் ஆவார். அன்றைய நாட்களில் எம்.ஜி.ஆருக்கு நான் நிறைய படங்கள் எழுதி அவற்றின் படப்பிடிப்பு சமயத்தில், அவரைப் பார்ப்பதற்காக அடிக்கடி செல்வராஜ் வருவார். அப்பொழுது அவரை எம்.ஜி.ஆர். எனக்கு அறிமுகம் செய்வித்து, நான் எழுதும் படங்களில் வேஷம் கொடுக்கச் சொல்வார். அதிலிருந்துதான் செல்வராஜூக்கு என்னுடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. எனது தமிழாக்கப்படங்களில் குரல் கொடுக்கும் குழுவிலும் இடம் பெற்று, என்னிடம் அதிக அன்பு செலுத்தினார்
எனது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் மறக்காமல் நினைவு வைத்திருந்து வாழ்த்துக்கடிதம் அனுப்புவதுடன், தொலைபேசி வாயிலாகவும் என்னை அழைத்து வாழ்த்து தெரிவிப்பார். நேரிலும் வந்து சந்திப்பார். அத்தகைய அன்பும், பண்பும் உள்ளவர் அவர்.
எம்.ஜி.ஆர். 1972-ல் தனியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியபோதும், 1977-ல் தமிழகத்தின் முதல்-அமைச்சர் ஆனபோதும் செல்வராஜ் அவருடன் தொடர்பு கொண்டிருந்தார். அதன் மூலம் தியாகராயநகர், சத்தியமூர்த்தி நகரில் வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் செல்வராஜூக்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டு, தன் மனைவி மக்களுடன் வாழ்ந்து வந்தார்.
எம்.ஜி.ஆரின் இறுதிக்கால கட்டத்தில் நோய்வாய்ப்பட்டு 1987-ல் சரியாக – தெளிவாகப் பேச முடியாத நிலையில் இருந்தார். அப்பொழுது, தன்னைப்பார்க்க வருவோருக் கெல்லாம் – அவர்கள் கேட்டும், கேட்காமலும், கல்யாணம் முதலிய நல்ல காரியங்களுக்குப் பொருளுதவி செய்து வந்தார். வாழ்க்கையில் வசதி குறைவானவர்களுடன், வசதி நிறைந்திருந்த நடிகர்கள் மற்றும் திரைப்படக்கலைஞர்கள் பலரும் கூட பணமாகவும், மற்றும் தங்க ஆபரணங்களாகவும் பெற்றுப் பயன் அடைந்தனர். 1987 டிசம்பர் மாதம் 23-வாழ்நாள்ல நான் எத்தனையோ பேருக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்கேன். ஆனா உன் ஒருத்தனுக்கு மட்டும் நான் கொடுக்கிறதா சொல்லி கொடுக்காம கடன்பட்டுட்டேன். ஆனா, அது என் தவறு இல்லை. நீதான் வந்து வாங்கிக்காம இருந்திட்டே. பரவாயில்லை. அடுத்த ஜென்மத்துல உனக்கு நான் பட்ட கடனை அடைச்சிடுவேன். கவலைப்படாதே… “
எம்.ஜி.ஆர். தமிழக முதல்-அமைச்சர் ஆன பிறகும் சபாபதி அவரை விட்டுப் பிரியாமல், முன்பு போல அன்றாட வழக்கப்படி அவரைக் கவனித்துக் கொண்டிருந்தார். சென்னையை விட்டு எம்.ஜி.ஆர். வெளியூர் முகாம் செல்லும் போதெல்லாம், அவர் கூடவே சென்று அம்மாவின் அறிவுரைப்படி அவரைத் தன் கண் போலக் காத்துக் கவனித்துக் கொள்வார். ஒருநாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். வெளியூர் சென்றுவிட்டு தனது காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவருக்கு முன்னாலும், பின்னாலும் உதவியாளர்களும், காவல்துறை அதிகாரிகளும் காரில் வந்து கொண்டிருந்தனர். அவர்களை எல்லாம் மிஞ்சிய ஆரம்பகால எம்.ஜி.ஆரின் பாதுகாவலரான அருமைத்தம்பி சபாபதி ஒரு ‘ஜீப்’ வண்டியில் வந்து கொண்டிருந்தார். குறிப்பிட்ட அந்த ஜீப் விதிவசமாக கோயம்புத்தூரில் விபத்துக்குள்ளாகி, அந்த இடத்திலேயே சபாபதி அகால மரணம் அடைய நேரிட்டு விட்டது. இதுநாள் வரையில், இமைகள் கண்களைக் காப்பதுபோல எந்த பிள்ளை தன்னைக் கவனித்துக் காத்து வந்ததோ – அந்த சபாபதி இப்போது இறந்து கண் மூடிக்கிடந்ததைக்கண்டு எம்.ஜி.ஆர். கதறி அழுதார். அந்த அழுகையை அதற்கு முன்பு தன் வாழ்நாளில் அவர் அழுததே இல்லை. எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை இந்தக் ‘கொடுக்கும் குணம்’, ‘வள்ளல் தன்மை’ பெயரும், புகழும், வசதிகளும் பெற்று வாழ்ந்த பிற்காலத்தில் மட்டும் வந்தது அல்ல. அதற்கு முற்காலத்திலும் வசதிகள் அதிகம் இல்லாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்த அந்த ஆரம்ப நாட்களிலும், எம்.ஜி.ஆரிடம் அதே வள்ளல் தன்மை இருந்ததை பல பழைய மூத்த கலைஞர்கள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். 10 ரூபாய் என்பது ஒரு பெரிய தொகையாக மதிக்கப்பட்ட அந்தக்காலத்தில், அவர் சில 10 ரூபாய் நோட்டுகளை மடித்து தனது முழுக்கைச் சட்டையின் கைப்பகுதியைச் சுருட்டி அதற்குள் வைத்திருப்பார். நலிந்தவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே, அவர்கள் கேட்காமலேயே பத்து, இருபது என்று கைக்கு வந்ததை அவர்களுக்குக் கொடுத்து உதவுவதை வழக்கமாகவைத்துக் கொண்டிருந்தார்.தர்மத்தின் பொருட்டு தன் தலையைக்கூட கொடுக்கத் தயாரான குமணன். வேடனிடமிருந்து அவன் விரட்டி வந்த கள்ளங்கபடம் இல்லாத ஒரு புறாவின் உயிரைக் காப்பதற்காக அதை தராசின் ஒரு தட்டில் வைத்து அதற்குச் சமமாகத் தனது சதையை அறுத்து நிறுத்துக்கொடுத்த சோழப் பெருமன்னன் ‘சிபிச்சக்ரவர்த்தி!’
படர்வதற்குத் தக்கக் கொம்பு எதுவும் இன்றி தரையில் சுருண்டு கிடந்த முல்லைக் கொடியை எடுத்து தனது தேரில் படரவிட்டு, அதன் அழகைக்கண்டு மகிழ்ந்து கால்நடையாக நடந்து அரண்மனைக்குத் திரும்பிய கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான ‘பாரிவேந்தன்!’ தன் ஆரோக்கியத்திற்கும், ஆயுள் விருத்திக்காகவும் வேடுவர்கள் கொண்டு வந்து கொடுத்த அரிய கருநெல்லிக்கனியை தமிழ் மூதாட்டி அவ்வை பிராட்டிக்கு அளித்து அகம் மகிழ்ந்த வள்ளல் அதியமான்! * மழையிலும், குளிரிலும் நடுங்கிக் கொண்டிருந்த ஒரு மயிலைக்கண்டு மனம் இரங்கி, உடனே தனது தங்க இழை வைத்து நெய்யப்பட்ட அங்க வஸ்திரத்தை எடுத்து அந்தக் கோல மயிலின் மீது போர்த்தி அதன் குளிரைத் தவிர்த்த கோமான் ‘பேகன்!’ ‘கவிச்சக்ரவர்த்தி’ கம்பனை ஆதரித்து, அவன் தமிழை வளர்த்த சடையப்ப வள்ளல்! * ஊர்தோறும் அன்னச்சத்திரங்கள் நிறுவிய கருணை வள்ளல் காஞ்சீபுரம் பச்சையப்ப முதலியார்! இறந்து அடக்கமான பிறகும்கூட வெளியே தனது விரலை நீட்டி அதில் இருந்த கணையாழியைக் கழற்றிக் கொள்ளச் செய்த செத்தும் கொடை கொடுத்த ‘சீதக்காதி’ போன்ற வள்ளல் பெருமான்களின் இனத்தைச் சார்ந்து, அவர்களின் குணத்தைக் கொண்டிருந்தவர் எம்.ஜி.ஆர். என்பது அனைவராலும் அறியப்பட்ட ஓர் உண்மையே! அதனால்தான் ‘திருமுருக கிருபானந்த வாரியார்’ அவருக்கு ‘பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை தந்தார் ......
வாழ்க! பொன்மச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் புகழ்.
VR S Selvendhiran






















