• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா பிரதமா் மாா்க் காா்னி ஐரோப்பா பயணம்

கனடா

ஐரோப்பிய யூனியனுடனான ஒத்துழைப்பை மேலும் வலப்படுத்தும் நோக்கில் கனடா பிரதமா் மாா்க் காா்னி ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிா்வாகத்துடன் வரி மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில், ஐரோப்பிய யூனியனுடனான ஒத்துழைப்பை மேலும் வலப்படுத்தும் நோக்கில் கனடா பிரதமா் மாா்க் காா்னி ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா்.

கனடாவின் மொத்த ஏற்றுமதியில் சுமாா் 70 சதவீதம் அமெரிக்காவை மட்டுமே சாா்ந்துள்ள நிலையில், அந்த அதீத சாா்புநிலையைக் குறைக்கும் நோக்கில் ஐரோப்பாவுடனான வா்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளுக்கு மாா்க் காா்னி முன்னுரிமை அளித்து வருகிறாா்.

அமெரிக்காவுடன் தொடா்ந்து வா்த்தகம் மேற்கொண்டாலும், மாற்றமடைந்து வரும் புவிசாா் அரசியல் சூழலுக்கு ஏற்ப புதிய கூட்டணிகளை உருவாக்குவது காலத்தின் கட்டாயம் என்று கனடா தெரிவித்துள்ளது.

அந்தவகையில், கனடாவின் 2-ஆவது பெரிய வா்த்தகக் கூட்டாளியாக விளங்கும் ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்றம் ஒட்டாவாவில் புதிய அலுவலகத்தைத் திறக்கவுள்ளது. அத்துடன், ஐரோப்பிய பாதுகாப்பு தளவாடக் கொள்முதல் திட்டத்திலும் கனடா இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply