ஜேர்மனியில் பயன்பாட்டிற்கு வந்த ஓட்டுநர் இல்லாத சரக்கு வாகனம்
germany permits first cab less autonomous truck on roads: ஜேர்மனியில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி சரக்கு வாகனம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஜேர்மனியில் தானியங்கி வாகன நிறுவனமான einride, பல்பொருள் அங்காடி சங்கிலியான lidl உடன் இணைந்து ஓட்டுநர் இல்லாதால் தானியங்கி சரக்கு வாகனத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
ஜெர்மனியின் கூட்டாட்சி மோட்டார் போக்குவரத்து ஆணையம் (KBA), விரிவான பாதுகாப்புச் சரிபார்ப்பு செயல்முறைக்குப் பிறகு முதல்முறையாக இந்த வகையான அனுமதியை வழங்கியுள்ளது.
நிலை 4 ஓட்டுநர் இல்லாத வாகனம் ஒன்று, பெர்லின் சாலைகளில் lidl விநியோக மையத்திற்கும் ஒரு சில்லறை விற்பனைக் கடைக்கும் இடையில் பொருட்களைக் கொண்டு செல்கிறது.
வர்த்தக ஓட்டுநர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், விநியோகச் சங்கிலியின் நம்பகத்தன்மையை மேம்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொண்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
லிடிலின் தாய் நிறுவனமான ஷ்வார்ஸ் குழுமம் தனது மற்ற பிரிவுகளிலும் இதனை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்து வருகிறது.






















