• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுவிட்சர்லாந்தில் உச்சம் தொடும் எரிபொருள் விலைகள்

Fuel prices close to record high: சுவிட்சர்லாந்தில் எரிபொருள் விலைகள் வரலாறு காணாத அளவில் உயர்ந்துவருகின்றன.

2022ஆம் ஆண்டு, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நேரத்தில், சுவிட்சர்லாந்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் எரிபொருள் விலைகள் உயர்வை எட்டின.

2022ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்தில் பெட்ரோல் விலை 2.20 சுவிஸ் ஃப்ராங்குகளாகவும், டீசல் விலை 2.30 சுவிஸ் ஃப்ராங்குகளாகவும் உயர்ந்தது. 

இந்நிலையில், தற்போது மீண்டும் அதே நிலை உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம், ஈரான் போர், ரைன் நதியில் நீர்மட்டம் குறைந்ததால் சரக்குக் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு முதலான காரணங்களால் மீண்டும் சுவிட்சர்லாந்தில் எரிபொருள் விலைகள் உயர்ந்துவருகின்றன. 

தற்போது, பெட்ரோல் விலை லிற்றர் ஒன்றிற்கு 2.05 சுவிஸ் ஃப்ராங்குகளாகவும், டீசல் விலை லிற்றர் ஒன்றிற்கு 2.30 சுவிஸ் ஃப்ராங்குகளாகவும் உள்ளது.

இதற்கிடையில், குளிர் காலம் நெருங்கும் நிலையில், வீடுகளை வெப்பப்படுத்துவதற்காக எரிபொருள் தேவை அதிகரிக்க உள்ளதால், டீசல் தொடர்பில் மேலும் அழுத்தம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Leave a Reply