• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நியூயார்க்கில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இந்திய பெண் உட்பட 2 பேர் பலி

நியூயார்க்கில் ரயில் விபத்தில் இந்திய வம்சாவளி பெண் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலாய்க்கா சித்ரே (24), அமெரிக்​கா​வின் நியூ ஜெர்​ஸி​யிலுள்ள டேடன் நகரில் வசித்து வந்​தார்.

இவரும், நேபாளத்​தைச் சேர்ந்த இவரது நண்​பர் நவம்கவுலும் இங்​குள்ள ரட்​கர்ஸ் பல்​கலைக்​கழகத்​தில் பட்​டப்​படிப்பு படித்​து​விட்டு அமெரிக்​கா​விலேயே தங்கி வேலை பார்த்து வந்​தனர்.

இந்​நிலை​யில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரு​வரும் லோயர் மன்​ஹாட்​டன் சப்வே ரயில் நிலை​யத்​துக்கு சென்​றுள்​ளனர். ரயில்வே தண்​ட​வாளத்​தைக் கடக்க முயன்​ற​போது இரு​வரும் அந்த வழியே வந்த ரயில் மோதி அதே இடத்​திலேயே இறந்​தனர்.

பின்​னர் அவர்களது உடல்​கள் மீட்​கப்​பட்டு மருத்​து​வ​மனை​யில் வைக்கப்பட்டுள்ளது ரயில் தண்​ட​வாளத்​தில் நவம் கவுல் தவறி விழுந்​த​தாக​வும், இதைப் பார்த்த மலாய்க்கா சித்ரே அவரைக் காப்​பாற்​றச் சென்று விபத்​தில் சிக்​கிய​தாக​வும் நியூ​யார்க் போஸ்ட் பத்​திரிகை செய்தி வெளி​யிட்​டுள்​ளது.  
 

Leave a Reply