• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் படம் 3 குறித்து முக்கிய அப்பேட்டை கூறிய சிவா

சினிமா

கடந்த 2010-ம் ஆண்டு சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் நடிகர் சிவா மற்றும் திஷா பாண்டே நடிப்பில் வெளிவந்த நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்.’ இப்படம் தமிழ் சினிமாவில் உள்ள வழக்கமான பாணிகளையும் காட்சிகளையும் கிண்டல் செய்து எடுக்கப்பட்ட படமாகும். இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து 2018-ம் ஆண்டு ‘தமிழ் படம் 2’ வெளியானது.

இப்படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்த பாகம் வெளியாகுமா? அப்படத்தில் எந்தெந்த படங்களையும், கதாநாயகர்களையும், காட்சிகளையும் வைத்து கிண்டல் செய்து எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. இதனால் 3-ம் பாகம் தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இருந்தனர்.

இந்த நிலையில், ‘தமிழ் படம் 3’ குறித்து நடிகர் சிவா முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிவாவிடம் ‘தமிழ் படம் 3’ குறித்து அப்பேட் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு,

தற்போது படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் படப்பிடிப்பைத் தொடங்கத் தயாராக உள்ளோம். அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக நடிகர் சிவா தெரிவித்தார். இதனால் அடுத்த மாதத்தில் ‘தமிழ் படம் 3’ குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Leave a Reply