• Welcome to TamilsGuide
செய்திகள் 1

1967 தேர்தல் முடிந்து அமைச்சரவை அமைக்கிற கட்டம் வந்தது.

சினிமா

 அண்ணா அமைச்சரவையை அவர் வீட்டிலிருந்து அமைக்காமல் நண்பர் ஒருவர் வீட்டில் அமர்ந்து பட்டியலைத் தயார் செய்தார்.

ஒரு தலைவர் 'முக்கிய' இலாகாவை விரும்பினார். அதற்காக இரு தலைவர்கள் அண்ணாவைச் சந்தித்தனர். அவர்க்கு 'அந்த' இலாகா தர வேண்டும் எனத் தந்திகள் குவிந்தன. தந்திகள் ஒரு மூட்டை அளவுக்கு இருந்தது. மூட்டையை அண்ணாவிடம் காண்பித்தனர். 30, 40 தந்திகளை எடுத்துப் பார்த்தார் அண்ணா. அவை ஒரே மாதிரியான வாசகங்களைக்கொண்டிருந்தன. அதைப் பார்த்துப் புன்னகைத்தார்.

 இன்னொரு தலைவருடைய மனைவி தன் கணவர் அமைச்சராக்கப்படவில்லை என்பதற்காக அண்ணாவைச் சபித்தார். இப்படி எத்தனையோ காட்சிகள் நிகழ்ந்தன.

 அமைச்சர் பட்டியல் இறுதியாக்கப்பட்டதற்குப் பிறகு இரா. செழியனிடம் அதனைக் கொடுத்து அனுப்பி எம். ஆர். இராதா சுடப்பட்டதால் மருத்துவமனையில் இருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரிடம் காண்பிக்கச் செய்தார். 9 பேர் கொண்ட கச்சிதமான அமைச்சரவை 1967 மார்ச் 6ஆம் தேதி அண்ணாவின் தலைமையில் பொறுப்பேற்றுக்கொண்டது.

= தகவல் : க..திருநாவுக்கரசு , திராவிட இயக்க ஆய்வாளர்

Leave a Reply