• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீனாவில் உண்மையான மீனைப் போல நீந்தும் செயற்கை மீன் - இணையத்தில் கவனம் ஈர்க்கும் காட்சிகள்

உண்மையான மீனைப் போலவே நீருக்கடியில் தத்ரூபமாக நீந்தக்கூடிய அதிநவீன ரோபோ மீன் ஒன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் நடைபெற்ற சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சியான CIFTIS-இல், ‘BG-5 Golden Dragon Fish’ என்ற இந்த ரோபோ மீன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சாதாரணமாகப் பார்க்கும்போது இது செயற்கையாக உருவாக்கப்பட்ட ரோபோ மீன் என்பதைக் கண்டறிவது மிகவும் கடினமாக இருக்கும் வகையில், உண்மையான மீனைப் போன்ற தோற்றத்துடனும் நீச்சல் இயக்கத்துடனும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அதிநவீன ரோபோ மீனை கடல்சார் தொழில்நுட்ப நிறுவனமான ROBOSEA உருவாக்கியுள்ளது.

நீரடிப் பகுதிகளில் உளவுப் பணிகள், ரகசியக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் கடல்சார் ஆராய்ச்சிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இந்த ரோபோ மீனைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையான மீனைப் போன்றே நீந்தக்கூடிய இந்த ரோபோவின் தொழில்நுட்பத் திறன், கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
 

Leave a Reply