குடியுரிமை வழங்க எக்கச்சக்கமாக கட்டணம் வசூலிக்கும் பிரித்தானியா
பிரித்தானிய குடியுரிமை பெற விண்ணப்பிப்போர், நிர்வாக செலவை ஒப்பிடும்போது, ஐந்து மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்துகிறார்களாம்.
பிரித்தானிய குடியுரிமை பெற விண்ணப்பிப்போர், உள்துறை அலுவலகத்துக்கு ஆகும் நிர்வாக செலவை ஒப்பிடும்போது, ஐந்து மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்துவதாக, சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
குடியுரிமை வழங்குவதற்காக, அமெரிக்கா வசூலிக்கும் கட்டணம், 562 பவுண்டுகள். மற்ற G7 நாடுகளை ஒப்பிடும்போது, குடியுரிமை வழங்குவதற்காக பிரித்தானியாதான் உள்ளதிலேயே அதிக கட்டணம் வசூலிக்கிறது.
விடயம் என்னவென்றால், ஒருவருக்கு குடியுரிமை வழங்குவதற்காக, பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு ஆகும் நிர்வாக செலவு, 324 பவுண்டுகள் மட்டுமே.
ஆனால், பிரித்தானியா 1,709 பவுண்டுகள் வசூலிப்பதுடன், குடியுரிமை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தனியாக 130 பவுண்டுகள் வசூலிக்கிறது.
ஆக மொத்தம், ஒருவர் பிரித்தானியக் குடியுரிமை பெறுவதற்காக செலுத்தும் கட்டணம், 1,839 பவுண்டுகள். ஆக, கிட்டத்தட்ட, ஐந்து மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கிறது பிரித்தானியா.






















