• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் இந்த வகை கோழி இறைச்சி தயாரிப்பு குறித்து எச்சரிக்கை

கனடா

கனடா கொஸ்கோ நிறுவனம், அறிவிக்கப்படாத "சோயா" கலந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், சில கோழி இறைச்சி தயாரிப்புகளை திரும்பப்பெற்று வருகிறது.

கொஸ்கோவின் இணையதளத் தகவல்படி, 'Rossdown Meal Starters Black Garlic Chicken Breast Chunks' (லொட் எண்: 295021) எனும் தயாரிப்பே இவ்வாறு திரும்பப்பெறப்படுகிறது.

இந்தத் தயாரிப்புகள் 2026 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் கனடாவில் உள்ள கொஸ்கோ விற்பனையகங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

"சோயா ஒவ்வாமை அல்லது உணர்திறன் உள்ளவர்கள் இந்தத் தயாரிப்பை உட்கொள்ள வேண்டாம். ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவை உட்கொள்வது கடுமையான அல்லது உயிருக்கு ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்" என கொஸ்கோ எச்சரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட தயாரிப்புகளை வாங்கிய வாடிக்கையாளர்கள், அவற்றை மீண்டும் கொஸ்கோ விற்பனையகத்திலேயே ஒப்படைத்து முழுப் பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
 

Leave a Reply