• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்தியாவுக்கு எதிராக எங்கள் மண்ணை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் - இலங்கை அதிபர்

இலங்கை

சீனா வழங்கியுள்ள கடனை இலங்கை அரசால் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஹம்பன்தோடா துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருடத்திற்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது இலங்கை. சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் இந்த துறைமுகம், அனைத்து வசதிகளுடன் அமைந்துள்ளது.

இலங்கை துறைமுகத்தில் இருந்து சீனாவின் உளவு கப்பல், இந்தியாவை உளவு பார்ப்பதாக இந்தியா சந்தேகம் அடைந்து வருகிறது. இலங்கையுடன் சீனா நெருக்கம் காட்டுவது இந்தியாவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என எண்ணுகிறது.

இந்த நிலையில்தான் இலங்கை உடனான உறவை மேம்படுத்தும் வகையில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார்.

இவர் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே-வை சந்தித்தார். அப்போது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அதன்பின் இலங்கை அதிபர் அனுர குமார திசனாயகே "இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எங்கள் மண்ணை பயன்படுத்தப்பட அனுமதிக்க மாட்டோம்" என்று உறுதி அளித்துள்ளார்.

இலங்கை விமானப்படைக்கான L70 ரக பீரங்கிகளை மேம்படுத்துவது மற்றும் இரு நாடுகளின் தேசிய மாணவர் படை (NCC) மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரிகளுக்கு (NDC) இடையிலான ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இரு தரப்பினரும் பரிமாறிக்கொண்டதாக இந்திய பாதுகாப்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply