43-ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக சட்டமன்றத்தில் நடந்தவிவாதில் உரையாற்றிய முதல்வர் எம்ஜிஆர்.
சினிமா
43-ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக சட்டமன்றத்தில் நடந்தவிவாதில் உரையாற்றிய முதல்வர்
எம்ஜிஆர். சட்டமன்ற விவாத்தில் அளித்த பதில்..
பழ.நெடுமாறன் 1000 பேருடன் யாழ்ப்பாணம் செல்லும் போராட்டம் அறிவித்த நிலையில் உரிய நாள் வந்ததும், ராமேஸ்வரத்தில் இருந்து அனைத்து படகுகளும் அப்புறப்படுத்தப்பட்டன.
இதுகுறித்து எழுந்த விமர்சனத்துக்குச் சட்டப்பேரவையில் 15 நவம்பர் 1983 அன்று முதல்வர் எம்.ஜி.ஆர். அளித்த பதிலில்..
"நெடுமாறன் படகில் அங்கே போய், இடையில் யாராவது சுட்டால் அவரிடம் துப்பாக்கி இருக்கிறதா? தடுப்புக் கருவிதான் இருக்கிறதா? ஒன்றும் இல்லை; மனத்துணிவுதான் இருக்கிறது.
அங்கே போய் ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? அதனால்தான் படகுகள் இல்லாமல் செய்தோம்... நான் போய் பிரசாரம் செய்யமுடியாது; நெடுமாறன் செய்கிறார்;
ஆட்கள் வருகிறார்கள்; பத்திரிகைகளில் செய்தி வருகிறது; வரட்டும். அது, அந்த நாட்டுக்கு நல்லதாக அமையட்டும்.
உணர்வுகள் பெருகுமானால் பெருகட்டும் என்பதற்காகவே அவரைக் கைது செய்யாமல் விட்டோம்"
படம் : சட்டமன்றத்தில் முதல்வர் புரட்சி தலைவருடன், நாவலர் நெடுச்செழியன், மற்றும் எஸ்.டி சோமசுந்தரம்..





















