• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

இலங்கை

ரஷ்யாவின் அஸூர் எயார் விமான நிறுவனம், ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்த விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அஸூர் எயார் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, ரஷ்யாவின் 5 விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கான விமானச் சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அஸூர் எயார் விமான நிறுவனத்திற்கு மேலதிகமாக, எரோஃப்ளோட் (Aeroflot) மற்றும் எஸ் செவன் (S7) ஆகிய விமான நிறுவனங்களும் ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன.

இதனிடையே, 11 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவின் பிரிட்டிஷ் எயார்வேஸ் (British Airways) விமான நிறுவனம் இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளது.

மேலும், ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் பிரித்தானியாவின் கெட்விக் (Gatwick) விமான நிலையத்திற்கும் கொழும்புக்கும் இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply