• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாசையூர் கடலட்டை பண்ணைகள் தொடர்பில் ஆராய்ந்த கடற்தொழில் அமைச்சர்

இலங்கை

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும்,  பொதுமக்களின் நலனையும் கருத்திற்கொண்டு அனைவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய தீர்வுகளை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பாசையூர் கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கடலட்டை பண்ணை அமைப்பதற்கான கோரிக்கையாளர்களை பாசையூர் பகுதியில் கடற்தொழில் அமைச்சர் சந்தித்து கலந்துரையாடிய போதே அவ்வாறு தெரிவித்தார்.

குறித்த சந்திப்பின் போதுஇ கடலட்டை பண்ணைகளை அமைக்கும் போது ஏனைய கடற்றொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில்இ பொருத்தமான இடங்களைத் தெரிவுசெய்து எவ்வாறு அவற்றை நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் விரிவாக கலந்துரையிடப்பட்டது.

அதன் போதுஇ கடலட்டைப் பண்ணைகள் தொடர்பில் மக்களின் கருத்துக்களையும் நேரடியாக அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
 

Leave a Reply