• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பு – ஜகார்த்தா இடையிலான விமான சேவைகள் இரத்து

இலங்கை

இந்தோனேசியாவின் அனாக் கிரகடாவ் (Anak Krakatau) எரிமலை வெடித்ததன் காரணமாக கொழும்புக்கும் ஜகார்த்தாவுக்கும் இடையே இன்று திட்டமிடப்பட்டிருந்த UL 364 (கொழும்பு–ஜகார்த்தா) மற்றும் UL 365 (ஜகார்த்தா–கொழும்பு) ஆகிய விமான சேவைகள் இரத்து செய்யப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இலங்கையை நோக்கிய மேற்கு வான்வழிப் பாதையிலான விமானப் போக்குவரத்தையும் அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட வான்வெளியைத் தவிர்ப்பதற்காக, சிட்னி மற்றும் மெல்போர்னிலிருந்து வந்த இரண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் நேற்று இரவு மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா இடையே சேவைகளை வழங்கும் மத்திய கிழக்கு நாடுகளின் பல விமான நிறுவனங்களும் தங்கள் பயணப் பாதைகளை மாற்றிக்கொண்டன.

இந்த எரிமலை வெடிப்பு காரணமாக இந்தோனேசியாவின் பல விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், இப்பகுதி முழுவதும் சர்வதேச விமானப் போக்குவரத்தில் பரவலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
 

Leave a Reply