75வது பிறந்தநாள் காணும் மம்மூட்டி.. வெறித்தனமான டைட்டில் போஸ்டர் வெளியீடு
சினிமா
மம்மூட்டி பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியாகி உள்ளது.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவரின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு அதிரிபுதிரி சர்ப்ரைஸ் ஒன்று வந்துள்ளது.
நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் மம்மூட்டி நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளது. இரவு 12.00 மணியளவில் செப்டம்பர் 7 (இன்றைய நாள்) தொடங்கியதும் வெளியான போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
படத்திற்கு மலையாளத்தில் "மேளா" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
போஸ்டரில் கருப்பு சட்டை அணிந்து Rugged ஆன லுக்கில் இருக்கிறார் மம்மூட்டி. இவருக்கு 75 வயதா? என்று நம்பமுடியாத அளவுக்கு அவரின் தோற்றம் அமைந்துள்ளது.
இந்த போஸ்ட்ரை அவரே தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இப்படத்தை மமூட்டி கம்பெனி நிறுவனம் சார்ப்பில் அவரே தயாரித்தும் உள்ளார். இது அவரின் தயாரிப்பில் 9வது படம் ஆகும்.
இதனிடையே மம்மூட்டிக்கு இணையத்தில் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். சமீபத்தில் உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்துள்ள மம்மூட்டி அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
கடைசியாக உழைப்பாளர் தினமான மே 1 அன்று அவரது நடிப்பில் பேட்ரியாட் படம் வெளியாகி இருந்தது. இதில் அவருடன் மோகன்லாலும் நடித்திருந்தார்.
மேளா படம் தருவித்து காலித் ரஹ்மான் இயக்கம் "மட்டன்சேரி மாபியா" படத்திலும் மம்மூட்டி நடிக்கிறார். அதுமட்டுமின்றி நீண்ட ஆண்டுகள் கழித்து தனது ஆஸ்தான இயக்குனரான அடூர் கோபாலகிருஷ்ணனுடன் கூட்டணி அமைத்துள்ள மம்மூட்டி 'பாதயாத்திரா' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
மலையாளம் தவிர்த்து தமிழில் தனுஷ் நடிக்கும் "ஓம்" படத்திலும் மம்மூட்டி நடித்து வருகிறார். இதில் அவர் வில்லன் ரோல் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





















