• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாகார்ஜுனாவின் பிறந்தநாளையொட்டி வெளியான கிங் 100 படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ

சினிமா

நாகார்ஜுனாவின் 100வது படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ அவரது பிறந்தநாளையொட்டி படக்குழு வெளியிட்டுள்ளது.

நாகார்ஜுனா கடந்த 1986-ல் ‘விக்ரம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படம் இந்தியில் வெளியான ‘ஹீரோ’ படத்தின் ரிமேக் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் விமர்சனங்களை சந்தித்தாலும், பின்னர் தனது முத்திரையைப் பதித்து தெலுங்கு சினிமாவின் சிறந்த நட்சத்திரமாக நிலைநிறுத்திக் கொண்டார்.

இதனிடையே, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நட்சத்திரங்களின் பட்டியலில் தற்போது நடிகர் நாகார்ஜுனாவும் இணைய உள்ளார். தென்னிந்திய சினிமாவில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி போன்ற ஜாம்பவான்கள் மட்டுமே இந்த அரிதான சாதனையை கொண்டுள்ளனர்.

நாகார்ஜுனாவின் 100-வது படத்தை தமிழ் இயக்குனர் ரா.கார்த்தி இயக்க இருக்கிறார். நாகார்ஜுனா இரட்டை வேடங்களில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ‘நித்தம் ஒரு வானம்’, ‘ஆகாசம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய தமிழ் இயக்குநர் ரா. கார்த்திக் இந்த படத்தை இயக்குகிறார். தற்போது இந்தப் படத்திற்கு ‘கிங் 100’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் நாகார்ஜுனா இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, நாகார்ஜுனாவின் பிறந்தநாளையொட்டி ‘கிங் 100’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கிளிம்ப்ஸ் வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இப்படம் வரும் டிசம்பர் மாதம் 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply